அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
கே.வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த கே.வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.நந்தகுமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்மாநாபன், கட்டிடக்குழு தலைவர் ரங்கநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் என்.வளர்மதி வரவேற்றார்.
ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்யநாதன், இயற்கை ஆர்வலர் கே.எம்.பாலு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.வி.பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளியின் 60-வது ஆண்டு விழா மற்றும் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளியின் தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்களை கவுரவித்து நினைவு பரிசுகள் வழங்கி பேசினார்கள். தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 37 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கினர்.
விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.