தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் வரவேற்றார்மாநிலத் துணைத் தலைவர் கணேசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் குழந்தைசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், சகிலா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story