பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்


பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் கடந்த 10-ந் தேதி முதல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை ஆசிரியர்கள் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை தலைவர் கலாநிதி, மாநில துணை தலைவர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட தலைவர் பாரி கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் விஜயகாந்த், நிர்வாகிகள் மாரி, கிருஷ்ணகுமார், ஆண்டாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story