ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்வதை கைவிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச்செயலாளர் ஈவேரா, வட்டார செயலாளர் வேதமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி வட்டாரத்தின் சார்பில் பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் வட்டாரச்செயலாளர் சந்திரமோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடவாசல் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். இதில் வட்டார செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட 10 இடங்களில் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மன்னார்குடி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நகரச்செயலாளர் மார்ட்டின் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.