திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டிவனத்தில்  ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காமராஜ் தலைமை தாங்கினார். ஏகாம்பரம், கிருஷ்ணசாமி, ராமமூர்த்தி, நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகம் அனைவரையும் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தொடக்க உரையாற்றினார். தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜீவேந்திரன், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேசினா். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைந்திட வேண்டும், 70 வயதான ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், 3 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், குடும்ப நல நிதியை உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் செல்வராஜ், வீனைதீர்த்தான், மரியதாஸ், கோவிந்தராஜன், சண்முகசுந்தரம், புருஷோத்தமன், ராமதாஸ், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், தண்டபாணி உள்பட பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இயேசுபால் நன்றி கூறினார்.

1 More update

Next Story