ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

விக்கிரவாண்டியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மகிமைதாஸ் தலைமை தாங்கினார். தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பபெற வேண்டும், மத்திய அரசிற்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷமிட்டனர். இதில் வட்டார செயலாளர் முகமது மீரான், மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட துணை தலைவர் அம்பிகா, மாவட்ட செயலாளர் சண்முகசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் மணமல்லிகை நன்றி கூறினார்.


Next Story