திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீஸ்குமார், செய்தி தொடர்பு செயலாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்மா பிரியதர்ஷன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்தவேண்டும். உபரி பணியிட மாறுதல் நடவடிக்கையை கைவிடவேண்டும். ஜூலை மாதத்தில் இருந்து வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களை கற்பித்தல் தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக மகளிர் அணி செயலாளர் வடிவுக்கரசி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story