ஆசிரியர் சங்கத்தினர் வாயிற் கூட்டம்


ஆசிரியர் சங்கத்தினர் வாயிற் கூட்டம்
x

அருப்புக்கோட்டையில் ஆசிரியர் சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் மதிப்பீட்டு மையம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் மணிவாசகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விடைத்தாள் திருத்துவதற்கான மதிப்பு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆக உயர்த்த வேண்டும், பொதுத்தேர்வு நேரத்தின் கால அளவினை குறைக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story