சென்னிமலையில் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள்


சென்னிமலையில் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள்
x

சென்னிமலையில் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள்

ஈரோடு

சென்னிமலை

தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டுக்கு பின்னர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து தமிழக முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஆசிரியர் தினமான கடந்த 5-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னிமலை ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று நடந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் ச.மாரித்துரை தலைமை தாங்கினார். தலைவர் மு.குணசேகரன், சென்னிமலை வட்டார செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருகிற 27-ந் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால் 3-ம் கட்டமாக 28-ந் தேதி முதல் மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் முதல் பருவ தேர்வு விடுமுறை நாட்களில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story