பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்கள்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்கள்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெம்பர் 10 முத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளியின் பெருமை என்ற திட்டத்தின் கீழ் பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர்கள் காளிமுத்து, மகேஷ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை நர்மதா அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் புதிய கற்பித்தல் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூறினார். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஹெரன், முனீஸ்வரி, மேனகா, திட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், அசோக்குமார், பள்ளி ஆசிரியர்கள் ராணி, ஆராவமுது, வேணி, ஜெயசித்ரா, அனிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிரசார வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.