திருச்சி, கரூர் உள்ளிட்ட அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி


திருச்சி, கரூர் உள்ளிட்ட அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி
x

திருச்சி, கரூர் உள்ளிட்ட அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

திருச்சி

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள திடலில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் கடந்த 31-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் அரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதேபோல் பல்வேறு துறைகளை சேர்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். நேற்று காலை பெண்களுக்கான கபடி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமானவர்கள் போட்டியை கண்டு ரசித்தனர். மாலையிலும் ஆண், பெண் இரு அணியினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப். சென்னை, ஜெகதீசன் சென்னை, பேங்க் ஆப் பரோடா கர்நாடகா, மகாராஷ்டிரா ஆர்மி, டெல்லி நேவி, புனேரி பல்டான், ஸ்டார் அகாடமி மணப்பாறை, அளத்தங்கரை கன்னியாகுமரி, அதிரடி பாய்ஸ் சரளப்பட்டி, ஜோசப் கல்லூரி திருச்சி, ஏ.கே.எம்.சி. கோபிச்செட்டிப்பாளையம் உள்பட 12 அணிகளும், பெண்கள் பிரிவில் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ரெயில்வே அணிகள், தானே பல்கலைக்கழகம் மும்பை, பாலம் டெல்லி, அரியானா, அமராவதி கரூர், சக்தி மெமோரியல் அந்தியூர், கோபி பி.கே.ஆர். உள்ளிட்ட 10 அணிகளும் கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் மழையால் நேற்று இரவு ஆட்டம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மீண்டும் போட்டிகள் தொடங்கி நடக்கின்றன. மேலும் இன்று இறுதி போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, ெவற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசுகளை வழங்குகின்றனர்.


Next Story