முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே கரியகாளியம்மன் கோவில் அருகில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிணத்துக்கடவு பேரூராட்சி தி.மு.க. நிர்வாகி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளக்ஸ் பேனரை கிழித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story