செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியானது


செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர்  வெளியானது
x

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

சென்னை,

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகின்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இத்தகைய போட்டியானது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் இன்று மாலை வெளியிட உள்ளதாக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story