விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு


விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
x

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிக அளவில் மலேசியா, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் 123 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 123 பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். மேலும் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு கோளாறை சீரமைக்கும் பணியை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு திருச்சியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 123 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. காலையில் புறப்பட வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவில் புறப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story