தொழில்நுட்ப பயிற்சி
மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது
திருநெல்வேலி
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிக்குளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில், 'ரியாக்ட் ஜே.எஸ். தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார்.
ஷோய்பின் டெக் சர்வீசஸ் நிறுவன அதிகாரிகள் எஸ்.டென்னிஸ், எம்.மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இணையதள பக்கம் உருவாக்குதல் மற்றும் நேர்காணல் திறன்கள் குறித்து விளக்கி கூறினர். மாணவர்களுக்கான இணையவழி தொழில்நுட்ப பயிற்சி தொடங்கப்பட்டது. ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைத்தலைர் பெல்லா அன்னஜோதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story