விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி


விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
x

முதுகுளத்தூரில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி தொடர்பான மாநில அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) தனுஷ்கோடி தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில் வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி முதுகுளத்தூர் வட்டாரத்தில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் துறை மூலம் பரிந்துரைக்கப்படும் தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்றார்.

இணை இயக்குனர் தனுஷ்கோடி கூறும் போது, பருத்தி சாகுபடி செய்து அதிக லாபம் பெறும் விவசாயிகள் சான்று பெற்று விதைகளை பயன்படுத்த வேண்டும். விவசாயம் எந்திர மயமாக்கம் ஆகிவிட்ட நிலையில் விவசாயிகள் நவீன எந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக வரிசையில் நல்ல இடைவெளி விட்டு விதைக்க வேண்டும் என்றார். வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கூறுகையில் விவசாயிகள் பருத்தியில் சரியான பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார். இதில் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி வட்டார பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story