நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப பயிற்சி


நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப பயிற்சி
x

அரசு வேளாண்மை கல்லூரி சார்பில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய பயிர்களுக்கு நேரடியாக சென்று பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி நிலக்கடையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பத்தையும், பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், மகசூல் அதிக அளவில் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து பயிர் பாதுகாப்பு பேராசிரியர் மாரீஸ்வரி நிலக்கடலையில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், பேராசிரியர் பாபு நிலக்கடலைக்கு தெளிக்க வேண்டிய உரங்கள் பற்றியும் பேசினர்.

மேலும் வேளாண் விஞ்ஞானி அய்யாதுரை நிலக்கடலை பயிர் சாகுபடி மூலம் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, இதன் மூலம் விவசாயிகள் செய்ய வேண்டிய தொழில் நுட்பங்கள் என்ன என்று கூறினார்.

இதில் தலையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் முடிவில் தொழில் நுட்ப உதவியாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.


Next Story