வளர்ச்சிக்கு தடையான பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகள்
வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகளுக்கு தொழில் நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகள் காணப்பட்டு வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகளுக்கு தொழில் நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகள் காணப்பட்டு வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சர்வதேச கருத்தரங்கம்
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக "சிவில்- 20 சப்மிட் "என்ற கருத்தரங்கம் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், உலகின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இவற்றோடு தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் கண்டு வருகிறோம். எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் நன்மை, தீமை என 2 பக்கங்கள் உண்டு.
இந்தியா ஜி-20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் நிலையில், உலக அளவிலான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது கருத்துகளை பெறும் வகையிலும் "சிவில்-20 "எனும் இது போன்ற மாநாடு நடத்தப்படுகிறது.
உலக அளவிலான பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வு காணும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. இந்த உலகில் உள்ள அனைவரும் அனைத்து உயிரினங்களும் ஒரே குடும்பம் என்கிற மேம்பட்ட சிந்தனையை நமது கலாசாரம் முன்னிறுத்தி வந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே இப்போது உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
150 நாடுகளுக்கு தடுப்பூசி
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சுமார் 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. தடுப்பூசியை வியாபாரம் ஆக்காமல் உயிர்களை காப்பாற்ற இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அரசு சார்ந்த வளர்ச்சி எனும் முறையை பின்பற்றி ஆட்சி செய்து வந்தன.
இதனால் மருத்துவம், கல்வி, வறுமை ஆகியவற்றை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஆனால் தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களை மையமாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதனால் மருத்துவம், கல்வி, பெண் பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், எரிவாயு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றோடு வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
டிஜிட்டலில் முன்னணி நாடு
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் டிஜிட்டல் மயம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அதன் வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது.
ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண காய்கறி கடைக்காரர் வரை டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு விற்பனை செய்து வருகிறார்.
இதன் மூலம் உலகில் தலைசிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா திகழ்கிறது. "ஜந்தன் யோஜனா "எனும் பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அரசின் பயன்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இவை அனைத் தும் வெளிப்படைத்தன்மையான அரசாங்க நிர்வாகத்தை காட்டுகிறது.
பெண்கள் மேம்பாடு
தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ ரேஷன் பொருட்களை பெற முடிகிறது. ஆதார் உள்பட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாக் கப்பட்டு உள்ளது.
பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தவரை பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அரசு மேற்கொண்டு வருகி றது.
தற்போது பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் அமல்ப டுத்தப்பட்டு பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.
மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, அனைத்தும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொழில்நுட்பத் தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்றால் ஒரு புறம் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. அவற்றை நாம் அதே தொழில் நுட்பத்தோடு கையாள தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே குடும்பம்
இந்த மாநாட்டில் உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சார்ந்த கருத்துகளை பல்வேறு வல்லுநர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இவை அனைத்தும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் சர்வதேச நாடுகள் தங்களது கொள்கைகளை வகுப்ப தற்கு உதவியாக இருக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியோடு இந்த உலகின் தாவரங்கள், விலங்குகள் உள்பட அனைவரும் ஒரே குடும்பம் என்கிற எண்ணத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் அமிர்தானந்தா மட துணைத்தலைவர் சுவாமி அமிர்தாஸ்வருபனானந்தா, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பாரதி கோஷ், விஜய்நம்பியார், வெங்கட்ரங்கன், விலாஸ்தார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.