ரூ.34½ கோடியில் தொழில்நுட்ப மையம்
திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34½ கோடியில் தொழில்நுட்ப மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டார்.
இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தனகீர்த்தி உள்பட அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.