கள்ளக்காதலனை பிரிந்த ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை


கள்ளக்காதலனை பிரிந்த ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
x

பஞ்சப்பள்ளி அருகே கள்ளக்காதலனை பிரிந்த ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே கள்ளக்காதலனை பிரிந்த ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இளம்பெண்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே காடுசெட்டிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகேசன். இவருடைய மனைவி சோபியா (வயது 21). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சோபியா அந்த பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் டெய்லராக இருந்தார். கடந்த மாதம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் சோபியா கிடைக்காததால் அவரை காணவில்லை என்று கணவர் அழகேசன் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

வாலிபருடன் ஓட்டம்

விசாரணையில், சோபியா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பென்னங்கூர் பகுதியை வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த சோபியா, அவருடனே குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. உடனே போலீசார் சோபியாவை, போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் காடுசெட்டிப்பட்டியில் உள்ள தன்னுடைய பெற்றோர்வீட்டுக்கு சோபியாசென்றார்.

தற்கொலை

இதற்கிடையே கள்ளக்காதலனை பிரிந்த ஏக்கத்தில் சோபியா வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். திடீரென வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சோபியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.


Next Story