தனியார் நிறுவன விடுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை


தனியார் நிறுவன விடுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
x

பூந்தமல்லி அருகே தனியார் நிறுவன விடுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் தாரணி (வயது 19), பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை விடுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அறைக்கு வந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் உடன் தங்கி இருந்த தோழிகள் சென்று பார்த்தனர்.

அப்போது அறையில் தூக்கில் தொங்கியபடி தாரணி தற்கொலை செய்துக்கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் தாரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story