மரத்தில் கார் மோதி இளம்பெண் பலி


மரத்தில் கார் மோதி இளம்பெண் பலி
x

மரத்தில் கார் மோதி இளம்பெண் பலியானார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

செங்கல்பட்டு

காதல் திருமணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 25). இவர், சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாக அறை எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுராபாத்கான். (27). இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

ரஞ்சிதா, சுராபாத்கான் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் தாம்பரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இளம்பெண் சாவு

நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து சங்கராபுரம் செல்வதற்காக ரஞ்சிதா தனனுடைய கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு பழவேலி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அதிவேகமாக காரை ஓட்டிவந்த சுரபாத்கானின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி மரத்தில் மோதியது.

இதில் ரஞ்சிதா சம்பவ இடத்திலிலேயே கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

சுராபாத்கான் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story