இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

சொக்கம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

சொக்கம்பட்டி அருகே உள்ள திருவேட்டநல்லூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோமு மனைவி பேச்சியம்மாள் (வயது 30). கணவன் மதுகுடித்துவிட்டு பேச்சியம்மாளிடம் தகராறு செய்து வந்தார். இதனால் பேச்சியம்மாள் சில ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கோமு தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்ததாகவும், பேச்சியம்மாளின் பெற்றோரும் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு வற்புறுத்தியாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பேச்சியம்மாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story