வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

ஆழ்வார்குறிச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் முத்துக்குமார் (வயது 29). மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதிகளில் கூலி வேலை பார்த்து வந்தார். இருதயராஜ் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. அவரது தாயார் ஆலங்குளத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை. உதவிக்கு வாருங்கள் என முத்துக்குமார் தனது தாயாரை அழைத்துள்ளார். அதற்கு அவர் 2 நாட்கள் கழித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துக்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story