வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை


வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை

கோயம்புத்தூர்

கோவை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வாட்ஸ்-அப்பில் பெற்றோருக்கு தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை குறித்து போலீசில் கூறியதாவது:-

இளம்பெண்

கோவை பி.என்.புதூர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மகள் மதுமதி (வயது 27). எம்.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் மதுமதியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் வாலிபர் உடனான காதலை கைவிடுமாறு தங்களது மகளை கண்டித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக மதுமதி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

வாட்ஸ்-அப்பில் தகவல்

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது மதுமதி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை பெற்றோர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு மதுமதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story