தாயை தாக்கிய வாலிபர் கைது


தாயை தாக்கிய வாலிபர் கைது
x

நெல்லை அருகே தாயை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள சிறுக்கன்குறிச்சி அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ் (வயது 63). இவருடைய மகன் முப்பிடாதி (31). இவர் வீட்டை தனக்கு மாற்றி தரும்படி தாயிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரஸ் வீட்டில் இருக்கும் போது முப்பிடாதி அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சரஸ் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ராபினா மரியம் வழக்குப்பதிவு செய்து முப்பிடாதியை நேற்று கைது செய்தார்.


Next Story