கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்

விழுப்புரம்

திண்டிவனம் தாலுகா ஈச்சேரி குளக்கரை தெரு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் அருள் என்கிற சசிக்குமார்(வயது 33). இவர் மீது ஒலக்கூர் பகுதிகளில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 10.5.2023 அன்று பிரேம்ராஜ் என்பவர் அவரது மனைவியுடன் கோவில் திருவிழாவுக்கு சொந்த ஊரான நொளம்பூர் வந்திருப்பதை அறிந்த அருள் அவரது நண்பர் ஶ்ரீகாந்துடன் சேர்ந்து பிரேம்ராஜை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றார். உடனே அருளை ஒலக்கூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடைய குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒலக்கூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story