திருநாவலூரில்அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
திருநாவலூரில் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 25). இவர் சம்பவத்தன்று நடந்த சாலை விபத்தில் காயமடைந்தாா். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த கணபதியுடன் வந்த அவரது நண்பர்கள் சிலர் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆஸ்பத்திரி முன்பக்க கதவு கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதிந்து, திருநாவலூரை சேர்ந்த சக்திவேல் மகன் பாண்டியன் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story