கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தஞ்சாவூர்

பாபாநாசம்

பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்டாரவாடை பெரிய தெருவில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் (வயது 25) என்பதும், விற்பனைக்காக 110 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் கரீமை கைது செய்து அவரிடம் இருந்த 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story