கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, மேல்புறம் பொற்றேல் கானத்துக் கோணம் பகுதியை சேர்ந்த அனி (வயது 26) என்றும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story