தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
தக்கலைூ
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளியாடி முருங்கவிளையில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழியை சேர்ந்த அபிஷேக்(வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 190 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story