கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று கிருபில்ஸ்பேட்டை, பெருமுச்சி, செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது செய்யூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த சச்சின் குமார் (24) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story