கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தை சேர்ந்த சுரேந்தர் (வயது 23) என்பவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story