கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

திசையன்விளையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை பி.எஸ்.என்.எல்.அலுவலகம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இட்டமொழி அம்பேத்கர் தெருவை சேர்ந்த சேர்மதுரை மகன் முத்துராஜ் (வயது 23) என்பவரை சோதனை செய்தனர். அதில் அவர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 23 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1500 மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தார்.


Next Story