கஞ்சா, சாராயம் வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா, சாராயம் வைத்திருந்த வாலிபர் கைது
x

கீழ்பென்னாத்தூரில் கஞ்சா, சாராயம் வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சந்தைமேடு நெடுங்காம்பூண்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவர் கடலாடிகுளத்தில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர்.

அப்போது அந்த வழியாக அஜித்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அ

ப்போது மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த 110 கிராம் கஞ்சாபொட்டலம் மற்றும் கேன்களில் இருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தார்.

பின்னர் போலீசார் அவரை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story