கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பில்லாந்தி கிராமம் மேட்டு காலனி தெருவைச் சேர்ந்தவர் படப்பை விக்கி என்ற விக்னேஷ் (வயது 26). இவர், ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார், படப்பை விக்கி என்ற விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தார்.

அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரை செய்ததன்பேரில், படப்பை விக்கி என்ற விக்னேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.


Next Story