கஞ்சா விற்ற வாலிபர் கைது
நாகூரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று காலை நாகூர் - திட்டச்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பனங்குடி சி.பி.சி.எல். அருகே சந்தேகப்படும் வகையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சாலையோரத்தில் உள்ள மரத்தடியின் பின்புறம் இருந்த ஒரு பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், நாகூரை அடுத்த சன்னமங்களம் ஓடை மேட்டுதெருவை சேர்ந்த அசோகன் மகன் ராஜு (வயது32) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்