கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் ஆங்காங்கே அதிகரித்து இருப்பதால், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி போலீசார் பல இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குன்னூர் கொலக்கம்பை அடுத்த மன்னர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரை சோதனை செய்தியில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கோவை மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.