கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

சோளிங்கரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ரவி என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 28) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story