கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவண்ணாமலை-போளூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருநது 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story