கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னவளையம்- பெரியவளையம் பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது போலீசார் அவரை துரத்திப் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துருவிதுருவி விசாரணை நடத்தினர். இதில், அவர் கஞ்சா விற்பனை செய்வதற்காக கையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் மாலிகா நகரை சேர்ந்த குத்புதீன் மகன் அன்சாரி(வயது28) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story