கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

மேல்மலையனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அருகே நெகனூர் கிராமத்தில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுகடம்பூர் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரன்ஸ் மகன் முருகன்(வயது 19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story