கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:46 PM GMT)

மன்னார்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி கீழராஜ வீதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கம்மாளதெருவை சேர்ந்த கபில்தேவ் (வயது 33) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த கபில்தேவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story