கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

ஏர்வாடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேதநாயகம் சேம்ஜி மற்றும் போலீசார் நம்பியாற்றுக்கு செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏர்வாடி உப்பு நடுத்தெருவை சேர்ந்த அப்துல்ரஹ்மான் மகன் சதாம் உசேன் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story