கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது
பட்டுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
கஞ்சா விற்பனை
பட்டுக்கோட்டையை அடுத்த அலிவலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தி்ற்கு சென்றனர். அங்கு மர்மநபர்கள் 2 பேர் பாலித்தீன் பையில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளம் பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் கமலக்கண்ணன் (வயது20) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் கழுகுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் என்கிற ராயப்பன் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து கமலக்கண்ணனிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஜேம்ஸ் என்ற ராயப்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.