பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது


பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6-வது பிளாட்பாரத்திற்கு வந்தடைந்தது. அப்போது எஸ்-4 ரெயில் பெட்டியின் படியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அகத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 46) என்பவரிடம் இருந்து வாலிபர் ஒருவர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதில் அதிர்ச்சியடைந்த கண்ணன் கூச்சலிட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஸ்மான், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் (24) என்பதும், இவர் மீது ஏற்கனவே பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையங்களில் பயணிகளிடம் இருந்து செல்போன் பறித்த வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story