கார் டிரைவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது


கார் டிரைவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோத தகராறில் கார் டிரைவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 41), கார் டிரைவர். இவர் விழுப்புரம் வழுதரெட்டி வீரன் கோவில் அருகே உள்ள கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்த தினேஷ்(24), ஜான்சன்(22) ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக ரவிச்சந்திரனை திட்டி தாக்கி, கத்தியால் வலது கை மற்றும் வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், ஜான்சன் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.


Next Story