ேபட்டரி திருடிய வாலிபர் கைது
ேபட்டரி திருடிய வாலிபர் கைது
ஒரத்தநாட்டை அடுத்துள்ள அய்யம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த பொன்னுச்சாமி மகன் குமரேசன் (வயது30). இவர் திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரத்தில் (டெக்னீசியன்) ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு விலகினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலி தென்பாதி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகள் காணாமல் போனது. அதனை தொடர்ந்து செல்போன் நிறுவனத்தின் அதிகாரிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலையில் இருந்து விலகிய குமரேசன் பேட்டரிகளை திருடி மற்றொருவரின் உதவியுடன் வாகனத்தில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்து, அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 24 பேட்டரிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.