செல்போன் திருடிய வாலிபர் கைது


செல்போன் திருடிய வாலிபர் கைது
x

கூடலூரில் கல்லூரி மாணவியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பள்ளிப்பாடி பகுதியை சேர்ந்தவர் தாரணி (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கூடலூருக்கு வந்த தாரணி அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு ஆசாமி பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மாணவி கூடலூர் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் திருடிய கீழ்நாடுகாணியை சேர்ந்த உகேந்திரன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story