வீட்டில் திருடிய வாலிபர் கைது


வீட்டில் திருடிய வாலிபர் கைது
x

வாணியம்பாடி அருகே வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது வீட்டில் 8 பவுன் நகை திருட்டு போனதாக ஆலங்காயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

மேலும் இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்துரு (வயது 23) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், பன்னீர்செல்வம் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.


Next Story